Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: கூட்டுறவு வங்கிகளில் வாரந்தோறும் சிறப்பு முகாம்

ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: கூட்டுறவு வங்கிகளில் வாரந்தோறும் சிறப்பு முகாம்

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எட்டும் வகையில், வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த கூட்டுறவுத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
இந்த முகாம்களில் நடுத்தரகால விவசாயக் கடன்கள், ஊரகத் தொழில் கடன்கள், வீட்டுவசதிக் கடன்கள், வீட்டு அடமானக் கடன்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன்கள், திருநங்கையருக்கான கடன்கள், மின் ஆட்டோ கடன்கள் மற்றும் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இக்கடன் முகாம்கள் குறித்த விவரங்கள் பொதுமக்களைச் சென்றடையும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவுக் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்புக் கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம். இது தொடர்பாக கூடுதல் விவரங்களை 9884000845 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
கடலை நோக்கி ஏவுகணைகளை வீசிய வடகொரியா - நடந்தது என்ன?
அடுத்த செய்தி
ஹெச்சிஎல்டெக் நிறுவன லாபம் உயர்வு

தொடர்புடைய செய்திகள்